Tuesday, June 9, 2009

என் அப்பாவின் நினைவாக



என் அப்பாவின் நினைவாக

இதோ நீங்கள் சென்று

இருபது வருடங்கள் போய் விட்டது

ஆனாலும்

என்னுடனேயே இருக்கிறிர்கள்

ஆமாம்

என் செயல் ஒவ்வொன்றிலும்

உங்களை நான் பார்கிறேன்

ஒரு தந்தையாய் இன்று

எனக்கு கிடைத்த மரியாதை

அது உங்களோடு இருந்த காலத்தில்

நான் கற்ற பாடங்கள்

நான் இழந்த மதிப்பு

அது என்னுடன் நீங்கள்

இல்லாமல் போனதால் ஏற்ப்பட்ட விபத்து

அய்யா எங்கிருந்தாலும்

என்னை வழி நடத்துங்கள்

உங்கள் வழியில் நான்

No comments:

Post a Comment