கல்யாணம் செய்தாலும் காதலியுங்கள் !!!
இங்கே காதல் என்ற தூண்டில் போட்டு
கரை எற துடித்தவர்கள்
கால் வழுக்கி தான் பார்த்திருக்கிறேன்
உணர்வுகளை புழுவாக்காதிர்கள்
உள்ளத்தை காட்டுஙகள்
உள்ளங்கையில் காதல் மீன் வரும்
காதல் என்பது என்ன?
நட்பா ? காமமா ?
இரண்டும் இல்லை,
இவை இரண்டும் கலந்த புரிதல்
புரிதல் இல்லா காதல்
வாழ்க்கை இல்லை
புரிதல் வரும் முன் காதலிக்காதீர் ,
புரிதல் வரும் முன் கல்யாணம் செய்யாதீர்
ந்ட்பு மட்டுமே காதல் அல்ல
காமம் என்பதும் பாவம் அல்ல
அது தான் காதலையும்
கல்யாணத்தையும்சேர்த்து வைக்கும்
கல்யாணம் என்பது என்ன ?
கல்யாணம் என்பது தரகு அல்ல
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதர்க்கு
காதலித்தால் கல்யாணம் செய்யுங்கள்
கல்யாணம் செய்தாலும் காதலியுங்கள் !!!